மரம் ஓர் வரம்


ஒவ்வொரு மரமும் ஓர் வரம், நன்றாக வளர்ந்த மரம் உற்பத்திசெய்யும் ஆக்சிஜன் அளவின் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு ரு.23 கோடி என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. எனவே ஒரு மரத்தின்விலையை மதிப்பிட முடியாது. ஆனால், அதன் உண்மையானமதிப்பை உணர்ந்துகொள்ள, பொருளாதாரரீதியில் அதை மதிப்பிட வேண்டியிருக்கிறது. இதை டெல்லி கிரீன்ஸ் அமைப்பு| செய்திருக்கிறது.

ஒரு ஆள் ஒரு நாளைக்கு 550 லிட்டர் ஆக்சிஜனை கிரகித்துக்கொள்கிறார். 2 வளர்ந்த மரங்கள், ஒரு நபருக்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. அந்த வகையில் ஒரு வளர்ந்த மரம் உற்பத்தி செய்யும் ஆக்சிஜனின் அளவு ஆண்டுக்கு ரூ.23 கோடி.



ஒரு மரம் தரும் ஆக்சிஜனின் மதிப்பே இவ்வளவு என்றால்,அது நமக்குத் தரும் மற்ற சேவைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். மரத்தைப் போன்று இயற்கையும், அதிலுள்ள பல்வேறு உயிரினங்களும், தாவரங்களும் மனித குலத்துக்கு காலங்காலமாகச் செய்துவரும் சேவைகளை புரிந்து கொண்டு,அவற்றைக் காப்பாற்ற வேண்டும். இந்த நோக்கத்துடன், உலக இயற்கை பாதுகாப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது.

நாம் உயிர் வாழ சுவாசிக்கும் காற்று முதல் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் உருவாக்குவதற்கான மூலப்பொருள் வரை அனைத்தும் இயற்கையிடம் இருந்தே கிடைக்கின்றன. கணக்கற்ற இந்த இன்றியமையாத சேவைகளை காசுவாங்கிக் கொள்ளாமல், ஒவ்வொரு விநாடியும் இயற்கை நமக்குவழங்கி வருகிறது. 1970க்குப் பிறகு இயற்கை வளங்களை மனிதகுலம் பயன்படுத்தும் விகிதம் இரண்டு மடங்காக அதிகரித்து, 33 சதவீத இயற்கை வளங்களை பூமி இழந்து இருக்கிறது என்று உலக இயற்கை நிதியம் கூறுகிறது. பல உயிரினங்களின் அழிவு இதற்கு எடுத்துக்காட்டு.



இயற்கையை பாதுகாக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் ஒட்டுமொத்த அழிவு விரைவாக நிகழ வாய்ப்பு அதிகம் என்று உயிரியல் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இயற்கை வளங்களை புத்திசாலித்தனமாக நிர்வகித்து, பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை, இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொருவரும் வளங்குன்றாத வளர்ச்சியை உருவாக்கவும், சூழலுக்கு இனக்கமான பசுமை வாழ்க்கை முறையை பின்பற்றவும் வேண்டிய அத்தியாவசியமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மரம் ஓர் வரம் மரம் ஓர் வரம் Reviewed by Unknown on 13:03 Rating: 5

No comments:

Powered by Blogger.