சிறுகதை நல்ல பழக்கம்


சிறுகதை நல்ல பழக்கம் 



வீட்டு முற்றத்தை சுத்தப்படுத்த கையில் துடைப்பத்துடன் வந்தால் சாந்தி. அப்போது எழும்புகள் எல்லாம் வரிசையாக சென்று கொண்டிருந்ததை கண்டாள். 

ஒரு ஒழுங்குடன் எறும்புகள் அணிவகுப்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. சிலகணங்கள் அதை மெய்மறந்து ரசித்தாள். 

"ஏய், எறும்புகளை! நீங்கள் எல்லோரும் வரிசையாக செல்லும் அழகை பார்க்கும் போது என் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் இப்போது எங்கே செல்கிறீர்கள்?" என்று கேட்டாள். 

உடனே எலும்புகளில் ஒன்று, "நாங்கள் இருந்த இடத்தில் இறை கிடைக்கவில்லை. அதோ அரசமரத்தின் அடியில் கோயில் இருக்கிறதல்லவா, அங்கே உணவுப்பொருட்கள் சிதறிக் கிடப்பதாக வாசனை மூலம் அறிந்தோம். அங்கேதான் கிளம்புகிறோம்" என்றது. 

"அச்சச்சோ, நான் இப்போதுதான் அவற்றைப் பெருக்கி தள்ளி விட்டு வருகிறேன். சரி, நீங்கள் ஏமாற்றத்துடன் செல்ல வேண்டாம். உங்களுக்கு நானே இறை தருகிறேன்" என்றபடி வீட்டினுள் சென்றவள், சிறு தானியங்களையும், சர்க்கரையையும் கொண்டு வந்து ஓரமாக வைத்தாள். 

வரிசைகட்டி எறும்புகள், திரும்பி வந்து அவற்றை தங்கள் கூட்டிற்கு எடுத்துச் சென்றன. "நீங்கள் செய்த உதவியை நாங்கள் மறக்க மாட்டோம்" என்று ஒரு எறும்பு கூற, எல்லா எறும்புகளும் அவளுக்கு நன்றி சொல்லி கிளம்பின. "உங்களைப் போன்ற சிறு உயிரினங்களை பாதுகாப்பது எங்களைப் போன்ற மனிதர்களின் கடமை அல்லவா, நான் எனது கடமையைத்தானே செய்தேன்" என்றாள் மனதிற்குள் மகிழ்ச்சி கொண்டாள். 

அப்போது அந்த மரத்தடியில் படுத்துக் கிடக்கும் நாய் லொள், லொள் என்று குரைத்தது. உடனே அவள், "உனக்கு என்ன வேண்டும்" என்று கேட்டாள். "உயிரினங்களை காப்பது மனிதர்களின் கடமை என்றாயே, எறும்புகளுக்கு மட்டும்தான் நீங்கள் உதவி செய்வீர்களா, என் போன்றவர்களுக்கு உதவும் மாட்டீர்களா?" என்றது. 

"நீ கேட்பது நியாயம்தான். உன்னையும் பாதுகாப்பது என் கடமை தான். ஆனால் நீ செய்யும் செயல்களால்தான் உன்னை மற்றவர்கள் விரட்டி அடிக்கிறார்கள். நீ இந்த மரத்தடி நிழலில் ஓய்வு எடுப்பதுடன், இங்கேயே அசிங்கமும் செய்துவிடுகிறாய். அந்த கெட்ட பழக்கத்தால் இங்கு வருபவர்கள் எல்லாம் முகம் சுழிக்கிறார்கள். உன்னை விரட்டி அடிக்கிறார்கள். அது உனக்கு புரிவதில்லை. 

நீயும் எறும்புகளைப் போல மற்றவர்களுக்கு இடையூறாக இல்லாமல், நல்ல பழக்கங்களை பின்பற்றினால் உனக்கும் அனைவரும் உணவு தருவார்கள். விரட்டி அடிக்க மாட்டார்கள்" என்றாள் சாந்தி. 

நாய் சிந்தித்துப் பார்த்தது. "நீ சொல்வது நிஜம் தான். இத்தனை நாளாக காலை கடனை நான் ஓய்வு எடுத்த இடத்திலேயே செய்துவிட்டேன். அது தவறு என்பதை இப்போது புரிந்துகொண்டேன். இனி ஒரு இடத்தை அசிங்கப்படுத்த மாட்டேன்" என்றது. 

"நல்லது நாயே, நீயும் நல்ல பழக்கத்தை பின்பற்ற தொடங்கினால் நான் உனக்கும் தேவையான உணவுகளை தருகிறேன்" என்றாள். 

அதைக்கேட்ட நாயும் மகிழ்ச்சி அடைந்தது. கெட்ட பழக்கத்தை விட்டொழித்தது.
சிறுகதை நல்ல பழக்கம் சிறுகதை நல்ல பழக்கம் Reviewed by Unknown on 18:58 Rating: 5

No comments:

Powered by Blogger.