சிறுநீரகக் கற்கள் - தொல்லையும் தீர்வும்

சிறுநீரகக் கற்கள் - தொல்லையும் தீர்வும்


சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு என்பது என்பதே ரத்தத்தில் உள்ள அதிகப்படியான நீர்,  தேவையற்ற நச்சுப் பொருட்கள் மற்றும் அதிகப்படியான தாது உப்புக்களை வடிகட்டி சுத்தம் செய்வது தான்.  இந்த செயல்பாட்டின்போது சிறுநீரகத்தில் சில காரணங்களால் இந்த தாது உப்புக்களை இந்த தாது உப்புக்கள் தங்கி படிமங்களாக மாறிவிடும் போது ஏற்படுவதுதான் சிறுநீரக கற்கள். சிறுநீரகக்கற்கள் சிறுநீரகத்தின் உள்ளேயோ, சிறுநீரக்குழாய்லோ (யுரிட்டர்)  சிறுநீர்ப் பையிலோ (ப்ளாடர்) அல்லது சிறுநீர்க் குழாயிலோ (யுரீத்ரா) ஏற்படலாம்.

இக்கற்கள் தோன்றுவதற்கான காரணங்கள் சில வகை உணவு வகைகள்,  போதுமான தண்ணீர் அருந்தாமல் இருப்பது,  நீரிழிவு போன்ற வளர்சிதை மாற்ற நோய்கள் இருப்பது, நீடித்த தொற்று இருப்பது போன்றவைகள் ஆகும். தண்ணீர் அதிகம் குடிக்க போது சிறுநீரின் நீர்ப்புத் தன்மை குறைந்து அதிலுள்ள உப்புகள் கெட்டிப்பட்டு சிறுநீர் பாதைகளில் தங்கிவிடலாம்.  சிறுநீர் பாதைகளில் அடிக்கடி தொற்று ஏற்படும் போதும் சிறுநீர் போக்கு தடைபட்டு அதனால் கற்கள் ஏற்படலாம்.  உணவு வகைகளில் அதிக கால்சியம் உள்ள காய்கறி மற்றும் பழ வகைகள்,  உலர் பழங்கள்,  கொட்டை வகைகள்,  சாக்லேட்,  கோலா போன்ற காஃபைன் நிறைந்த பானங்கள், அதிக டீ போன்றவைகளும் கற்கள் தோன்ற காரணங்களாகும், சிறுநீரக கற்கள் எந்த இடத்தில் இருக்கிறதோ அதை பொறுத்து அதன் அறிகுறிகள் இருக்கும். சிறுநீரகத்தின் உள்ளேயே இருக்கும் போது முதுகின் நடுப்பகுதியில் வலியும், அந்த வலி அடிவயிறு மற்றும் தொடையிடுக்கு வரையில் பரவுவதாக இருக்கும்.  இந்த வலி பொறுத்துக் கொள்ளும் அளவில் தொடர்ந்து நீடித்திருக்கும்.  இக்கற்கள் சிறுநீரகத்திலிருந்து சிறுநீரகக்குழாயில் இறங்கத் தொடங்கினாலும், அடைத்துக்கொண்டாலோ அதே வலி, வாந்தி, அதிக வியர்வை, மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு போன்றவை ஏற்படும். கற்கள் அடைத்துக்கொண்டு சிறுநீர் கீழே இறங்காமல் சிறுநீரகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் சிறுநீர் தாரையில் தொற்று ஏற்படலாம். கற்கள் சிறுநீர் குழாயின் சுவரில் உராய்வதால் ரத்தக் கசிவு ஏற்பட்டு சிறுநீரில் ரத்தம் வரலாம். தொற்று ஏற்பட்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, அடிவயிற்றில் வலி, குளிர் மற்றும் ஜுரமும் ஏற்படலாம். சிறுநீரின் நிறம் வெண்மையாகவும், கலங்கலாகவும், அடர் மஞ்சள் நிறமாகவும், சிவப்பு நிறமாகவும் இருக்கலாம். சிறுநீரில் தொற்று இருந்தால் துர்நாற்றம் ஏற்படலாம். கற்கள் முழுவதுமாய் அடைத்திருந்தால் சிறுநீரே வராமலும் இருக்கலாம். 

சிறுநீரக கற்களுக்கான சிகிச்சைகள் என பார்க்கையில் பல முறைகள் இருக்கிறது. உள் நுழையாத சிகிச்சை முறையான இஎஸ்டபிள்யூ என்பது சவுண்௶ வேவ் மூலமாக சிறுநீரகத்திலிருந்து கீழே இறங்க முடியாத பெரிய அளவில் உள்ள கற்களை உடைக்கும் முறையாகும். குழாயில் அடைத்திருக்கும் கற்களையும் கூட இம்முறையில் சிறு துகள்களாக உடைத்து சிறுநீரில் வெளியேறிவிட உதவலாம். அடுத்தது ஃப்லெக்சிபிள் யூரிட் ரோஸ்கோப் என்றா மடங்கக்கூடிய டெலஸ்கோப் கருவியை சிறுநீர் பாதை மூலமாக உட்செலுத்தி சிறுநீர் குழாய், சிறுநீர்பை, சிறுநீரகக்குழாய் மற்றும் சிறுநீரகத்தின் எந்தப் பகுதியில் கல் இருந்தாலும் அதை நீக்க முடியும்.
சிறுநீரகக் கற்கள் - தொல்லையும் தீர்வும் சிறுநீரகக் கற்கள் - தொல்லையும் தீர்வும் Reviewed by Unknown on 07:35 Rating: 5

No comments:

Powered by Blogger.