வேலைக்குப் போகும் பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள், புதுமைப் பெண்கள் என்றெல்லாம் புகழாரம் சூட்டப் படுகிறார்கள்.
பெண்கள் வேலைக்கு செல்வதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது குடும்ப பொருளாதாரம். அதற்கு தேவையான பணத்தை மட்டும் சம்பாதித்து வெட்டு வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் பெருகிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களால் வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களைக்கூட பொறுமையாக அனுபவிக்க முடிவதில்லை.
காலையில் செய்தித்தாள் படிப்பது, தேநீர் அருந்துவது, காலை உணவை சாப்பிடுவது எல்லாமே பாதியில் முடிந்து விடுகிறது. அவர்கள் கடிகாரத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து வேலை செய்யவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள். அப்போது மனதில் ஏற்படும் பதற்றம் அவர்கள் உடம்பையும், உள்ளத்தையும் உலுக்கிவிடும்.
காலை நேர அவசர வேலைகளுக்கு மத்தியில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயார் படுத்த வேண்டி இருக்கும். குழந்தைகளை படுக்கையைவிட்டு எழுப்புவதே பல வீடுகளில் தாய்மார்களுக்கு சவாலான விஷயமாக இருக்கும். தாயாரின் அவசரம் புரியாமல் குழந்தைகள் அடம் பிடிக்கும்.
அப்போது குழந்தைகளிடம் ‘ உன் எதிர்காலத்திற்காக தான் நான் சம்பாதிக்கிறேன்’ என்று சொன்னாள் அவர்களுக்கு புரியுமா ? அந்தப் பருவத்தில் குழந்தைக்கு தேவை அம்மாவின் அரவணைப்பு தான். பணம்மல்ல! வீட்டில் உள்ள வளர்ப்பு பிராணிகளுக்கு கிடைக்கக்கூடிய அன்பு கூட பல வீடுகளில் குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை அப்படிப்பட்ட மனநிலையில் வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படி இருக்கும்? என்பதைப் பற்றி சிந்திக்கக்கூட அம்மாக்களுக்கு நேரம் இருக்காது.
காலையில் எழுந்தால் அலுவலகத்தில் பொய் செய்யவேண்டிய வேலைகள் மட்டுமே மனதில் ஓடிக்கொண்டிருக்கும். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பும்போது மனம் முழுவதும் வீட்டு வேலை மீது இருக்கும்.
வீட்டிற்கு வந்தவுடன் எதை முதலில் செய்வது, எதை அடுத்து செய்வது என்பது கூடுதல் குழப்பத்தை தரும். முடிந்தவரை முக்கியமான வேலைகளை செய்துவிட்டு மற்றதை ஒதுக்கிவிட்டு மறு நாளைக்கு தேவையானவைகளை செய்து முடித்துவிட்டு படுப்பதற்கு போதுமென்றாகி விடும். கால் வலி, உடம்பு வலியை கூட உணரமுடியாமல் தூங்கி போய் விடுவார்கள்.
இப்படி பரபரப்பாக இயங்குபவர்கள் குழந்தைகளிடத்தில் பொறுமையாக கையாள பழகிக்கொண்டாலே சுமூகமாக செயல்பட தங்களை தயார்படுத்திக் கொள்ளலாம். அடம் பிடிக்கும் குழந்தைகளிடம் பக்குவமாகப் பேசி அவர்களுக்காகவே பள்ளிக்கு தயாராகிவிடும் சூழலை உருவாக்க வேண்டும். மாலையில் பணி முடிந்து வீடு திரும்பும்போது கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றிட வேண்டும் அப்படி செய்து வந்தாள் இயல்பாகவே குழந்தைகள் தாயார் மீது நம்பிக்கை கொண்டு அடம் பிடிக்காமல் தங்கள் வேலைகளை தாங்களே செய்து கொள்ள பழகி விடுவார்கள்.
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு…
Reviewed by Unknown
on
07:49
Rating:
No comments: